கோவை: விபத்தில்லா தமிழகமாக மாற்ற தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் காவல்துறை தலைவர் திரு. பெரியய்யா., இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் ‘நோ ஹெல்மட் நோ என்ட்ரி’ என்ற புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். யாராவது ஹெல்மட் அணியாமல் உள்ளே நுழையாதபடி போலீசார் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் மீறி சென்றால் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும்.