சென்னை : சென்னை, தொடர் குற்றச் சம்பவத்தில், ஈடுபட்ட ஏழு பேரை, குண்டர் சட்டத்தில் காவல் துறையினர், கைது செய்தனர். சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர், தியாகராஜன், (53), இவர், லோன் வாங்கித் தருவதாகக் கூறி, 1.25 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அதேபோல், துாத்துக்குடியைச் சேர்ந்த திபாகரன், (39), மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப, கல்விக் குழுவின் பெயர் மற்றும் ‘லோகோ’வை பயன்படுத்தி, போலியான நேர்முக தேர்வு நடத்தி, பண மோசடி செய்தார். இதேபோல், ஜெயசூர்யா, (24) கொருக்குப்பேட்டை அரவிந்தன், (22), உதயகுமார், (30), பழைய வண்ணாரப்பேட்டை முகமது ரசூல்லா, (22), திருவல்லிக்கேணி பாண்டியராஜன், (44), ஆகிய ஏழு பேர், தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால், ஏழு பேரையும் குண்டர் சட்டத்தில் காவல் துறையினர், செய்தனர். இந்தாண்டில் இதுவரை, 124 பேர் குண்டர் சட்டத்தில், கைது செய்யப்பட்டுள்ளனர்.