கிருஷ்ணகிரி: சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சையத் தன்வீர் அகமத் கடந்த வருடம் சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் ஷில்பா (32) என்பவரை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அயர்லாந்தில் பணிபுரிந்து வந்த இவர்கள் தன் மனைவி பிரசவத்திற்காக மனைவியின் தாய் வீட்டில் விடுவதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டைக்கு வந்தார்.
கடந்த ஒருமாதமாக ராயக்கோட்டையில் இருந்த இவர், கடந்த 12-ந் தேதி காலை பெங்களூருவுக்கு சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சையத் தன்வீர் அகமத் சென்றார். ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து ஷில்பா கடந்த 13-ந் தேதி ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் ராயக்கோட்டை ரெயில் நிலையம் அருகில் சையத் தன்வீர் அகமத் பிணமாக கிடந்தார். அவரது தலையின் பின்பகுதி பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டும், உடலில் பல இடங்களில் ரத்தமாகவும் இருந்தது.
சையத் தன்வீர் அகமதை கொலை செய்த மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.