கடலூர்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் காட்டுமன்னார் கோவில் பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.மகேஷ், உதவி-ஆய்வாளர் திரு.கந்தசாமி, சிறப்பு உதவி-ஆய்வாளர் திரு.சவுந்தர்ராஜன், காவல் ஏட்டுக்கள் ராஜா, செல்வக்குமார், வெங்கடேசன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று, காட்டுமன்னார்கோவிலில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை காவல்துறையினர் மறித்து சோதனை செய்தனர். அதில் புதுச்சேரியில் இருந்து காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள ஷன்டன் கிராமத்திற்கு மதுப்பாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.
மேலம் இவர்கள் வேளப்பூண்டி கிராமத்தை சேர்ந்த ராஜா(40), தொரப்பு கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கல்யாணசுந்தரம்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, ஆட்டோவில் இருந்த 96 மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் காரில் 60 லிட்டர் சாராயம் கடத்தி வந்த, ஷண்டன் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன்(27), கிழகடமலூரை சேர்ந்த அறவாழி(40) ஆகியோரையும் போலீசார் கைது செய்து, 60 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் போலீசாரை கண்டதும் காரில் இருந்து தப்பி ஓடிய டிரைவர் கல்லடிக்குட்டையை சேர்ந்த துரைராஜ் என்பவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.