சென்னை : மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ், தரமணியில் ‘பேஷன் டெக்னாலஜி’ என்ற, தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவன இயக்குனர் அனிதாமோபெல், இதே நிறுவனத்தின் உதவி இயக்குனர் இளஞ்செழியன். இவர் மீது இயக்குனர் அனிதாமோபெல், ஜாதிய வன்மத்துடன் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, இளஞ்செழியன் அளித்த புகாரின்படி, துறை அதிகாரிகள் மற்றும் காவல் விசாரணை நடத்தினர். இதையடுத்து, தரமணி காவல் துறையினர், வன்கொடுமை சட்டத்தின் கீழ், அனிதாமோபெல் மீது, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.