கன்னியாகுமரி: மாவட்டம் 15.08.2019, இன்று நாட்டின் 73-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாகர்கோயில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் *திரு. பிரசாந்த் வடநெரே IAS* அவர்கள் தேசிய கொடியேற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *Dr.N.ஸ்ரீநாத் IPS* அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பல காவல் அதிகாரிகள் பல துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காவலர்களின் அணிவகுப்பு மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.