கடலூர்: கடலூரில் ராமநத்தம் அருகே கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே பெட்ரோல் நிலையத்தில் இருந்து பின்நோக்கி வந்த கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் படுகாயமடைந்த 17 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.