கடலூர்: கடலூரில் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனையில் நான்கு மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், சில பெட்டி கடைகளில் குட்கா விற்பது கண்டுபிடிக்கப்பட்டது .
இது குறித்து விசாரித்த போது கடலூர் தேரடி தெருவில் உள்ள ஹஷ்முக் ஏஜென்சிஸ் என்ற கடையில் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதனை அடுத்து அங்கு சென்ற உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் 4 மூட்டை குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .
அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் உரிமையாளர் அசோகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.