கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 23.08.2019 , அன்று சிதறால் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் . இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக ஒருதலை காதல் காரணமாக ஷர்மி என்ற பேராசிரியரை ஷாஜின் என்பவர் கொலை செய்த வழக்கில் சாட்சியாக இருந்து அவருக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். இந்த பகை காரணமாக ஷாஜினின் நண்பனான பிரபல ரவுடி சுனில் (28) ஆனந்த் (27) , சஜிக்குமார் (24), சஜீன்(30) ஆகியோர் சேர்ந்து சாந்தகுமாரை கடத்தி சென்று 2 லட்சம் பணம் கேட்டு அவரது மனைவிக்கு செல்போனில் மிரட்டியுள்ளனர்.
செய்வது அறியாது திகைத்த அவரது மனைவி ராதா (36) மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திரு.சிவ சங்கர் அவர்களை கொண்ட தனிபடையினர் விரைந்து செயல்பட்டனர். குற்றவாளிகளுக்கு முதற்கட்டமாக 50,000 ரூபாய் சாந்தகுமாரின் மனைவியை வைத்து கொடுப்பது போல அவர்களை ஆலுவிளை பகுதியில் வரவழைத்து 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
கடத்தப்பட்ட 5 மணி நேரத்திற்குள்ளாக சாந்தகுமார் மீட்கப்பட்டார். குற்றவாளிகள் நான்கு பேரையும் மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்கள் u/s 341, 294(b) , 347, 363 , 387 , 506(ii) IPC படி வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார். கடத்தப்பட்ட நபரை 5 மணி நேரத்திற்குள்ளாக மீட்ட காவல் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.