இராமநாதபுரம்: சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில், இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஐஸ்வர்யா அவர்கள் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் பிரிவுகளில் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். இவர் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மோகன் அவர்களது மகள் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யா அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம்பிரகாஷ் மீனா, இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.
                                











			
		    


