சென்னை: முன்னாள் பிரதமர் நேருவுக்குப் பிறகு குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த தலைவர் என்றால் அது முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.APJ.அப்துல் கலாம் அவர்கள். Dr.APJ.அப்துல்கலாம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவுநாளை(ஜீலை 27) முன்னிட்டு ஆயிரம் (1000) மரக்கன்றுகள் நடப்பட்டது. இதனை அம்பத்தூர் காவல் துறை உதவி ஆணையர் திரு.கண்ணன் கலந்து கொண்டு மரத்தை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியை திரு. A. ஆறுமுகம், திரு.A. கண்ணன் ஏற்பாடு செய்தனர். இதில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு . ஐசக்டேவிட், திரு.வீரமணி (Accident Free Nation ) , செந்தில் குமார், சுதாகர் மற்றும் அம்பத்தூர் காவல்துறையினர் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பாக நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.