மாநில குற்ற ஆவணக் கூடம் (STATE CRIME RECORDS BUREAU(SCRB))

மாநில குற்ற ஆவணக் காப்பகம், குற்றம் மற்றும் குற்றவாளிகள் பற்றிய விவரங்களைச் சேகரித்து, ஒருகிணைத்துப் பகுப்பாய்வு செய்கிறது. ,க்காப்பகம், காவல் கணினிப் பிரிவு, விரல் ரேகைப் பதிவுக் கூடம், புள்ளிவிவரப் பிரிவு மற்றும் குற்றவாளிகள் குற்றம் செய்ய கையாளும் முறையைக் கண்காணிக்கும் பிரிவு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கி காவல்துறைத் தலைவர் ஒருவரின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. மேலும் குற்றம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தகவல்களையும் ஒருங்கிணைக்கும் மையமாகவும் செயல்படுகிறது. 2008ஆம் ஆண்டில் 84 சதவிகித திருட்டுப் போன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சார்பில் குற்றம் மற்றும் குற்றத் தகவல் முறை (Crime and Criminal Information System) மற்றும் பொது ஒருங்கிணைந்தக் காவல் அமைப்பின் செயல்பாடு (Common Integrated Police Application) ஆகிய மென்பொருள்களைக் கொண்டு தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நிகழ்வுகளைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist