திருநெல்வேலி: திருநெல்வேலி மாநாகரில் குற்றங்களை குறைக்கவும், சாலை விபத்துகளை தடுக்கவும் நெல்லை மாநகர காவலர் ஆணையர் வழிகாட்டுதலில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக “ மக்களை நோக்கி மாநகர காவல்”என்ற புதிய முயற்சி துவங்கப்பட்டுள்ளது .
இத்திட்டம் குறித்து நெல்லை (சட்டம் & ஒழுங்கு) காவல் துணை ஆணையர் திரு.ச. சரவணன் அவர்கள் கூறுகையில், இதன்மூலம் ஒவ்வோரு வாரமும் வார இறுதி நாட்களில் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் மக்கள் வசிக்கும் இடங்களில் அவர்களை கூட்டி குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு, CCTV முக்கியத்துவம் குறித்து பேசுவார்கள் .
“மக்களை நோக்கி “ திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:-
🎯 மாநகரின் சமீபத்தில் நடந்த குற்ற சம்பவங்கள் என்ன அதனை தடுக்க செய்ய வேண்டியவை என்ன?
🎯 அந்நிய சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பின் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் .
🎯 பொதுமக்கள் இணைந்து தங்கள் பகுதிகளில் CCTV அமைப்பதன் அவசியம் குறித்து தெரியப்படுத்துவது.
🎯 சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை குறைப்பது.
🎯 ATM PIN நம்பர் கேட்கும் மோசடி செல்போன் அழைப்புகள், பரிசு விழுந்துள்ளதாக வரும் தகவல்களை புறந்தள்ளுவது எப்படி!
🎯 காவல்துறையின். கட்டுபாட்டு எண் பகிர்ந்து கொள்ளுதல்
மக்களை நோக்கி மாநகர காவல்துறை திட்டத்தின்மூலம் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி குறையும்.
நேற்று நெல்லை உடையார்பட்டி, சாஸ்திரி நகர், தாய் நகர், செந்தில்நகர், ரகமத் நகர், போலீஸ் காலனி, செல்வ விக்னேஷ் நகர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.
“மக்களை நோக்கி” திட்டத்தை ஆர்வத்துடன் தொடங்கிய உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் , சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இத்திட்டம் தங்கள் பகுதிகளில் நடைபெற வேண்டுமெனில் காவல் நிலையத்திலோ அல்லது காவல்கட்டுபாட்டு அறையிலோ 0462 2562651 தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.