தஞ்சை,ஜூன்.2-
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரப் புறப்பகுதியான மேலக்காவேரியில் 31.05.2022 செவ்வாய்கிழமை மாலை நடந்த தினேஷ் என்பவரின் கொலை சம்பவ வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. ரவளிபிரியா ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. அசோகன் அவர்களின் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. அழகேசன் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. கீர்த்தி வாசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா, செல்வகுமார், காவலர்கள் பாலு, நாடிமுத்து ,சுரேஷ், ஜனார்த்தனன், பார்த்திபன், ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தார்கள்.
இந்நிலையில் கொலையாளிகளை பற்றி கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கும்பகோணம் புறப்பகுதியில் மறைந்திருந்த மேலக்காவிரி பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் மணிகண்டன் (27) கும்பகோணம் து.பாளையத்தெரு கணேசன் மகன் கார்த்திக் (21) மேலக்காவிரி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் விஜயகுமார் (22), செல்வராஜ் மகன் சிபிராஜ் (19) , பாலகுரு மகன் சந்தோஷ் குமார் (23) கும்பகோணம் செட்டிமண்டபம் ராஜன் மகன் தருண்பாலாஜி (19) ஆகிய ஆறு நபர்களை கும்பகோணம் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்கள் வைத்திருந்த கொலை செய்ய பயன்படுத்திய கத்தி மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்களும் கைப்பற்றினார்கள். மேலும் அவர்களிடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் கொலையாளிளை கைது செய்துள்ள கும்பகோணம் காவல்துறையினர்ரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்