கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் (21.07.2025) ஆம் தேதி காலை சுமார் 7.00 மணிக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஓசூர் ராயக்கோட்டை ரோடு சானசந்திரம் பிரிவு ரோட்டில் சந்தேகப்படும் படியாக வந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் விசாரணை செய்த போது வாகனத்தின் ஓட்டுநர் அவரது முகவரியை முன்னுக்கு பின் முரணாக கூறினார் எனவும் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்தபோது ஜெலட்டின் குச்சிகள், எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள் இருந்தது அது பற்றி அந்த நபரிடம் விசாரிக்க மேற்கண்ட வெடிபொருட்களை எந்த ஒரு உரிமமும் மற்றும் ரசிதும் இல்லாமல் உரிய அனுமதியின்றி வாங்கி வந்து கல் உடைக்கும் கம்பரசர் வண்டிகள் வைத்திருக்கும் நபர்களுக்கு விற்பனை செய்வதாக கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டவரை கைது செய்து அவரிடமிருந்து வாகனத்துடன் வெடிபொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.