இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களின் வீடுகளில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 8 நபர்களின் வீடுகளில் இருந்து அபாயகரமான ஆயுதங்கள் மீட்கப்பட்டதால், அவர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.















