கோவை : கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள் இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு வழிப்பறி கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை பக்கம் உள்ள பாப்பம்பட்டி கருமத்தம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த ஆந்திர மாநில கொள்ளைக் கும்பலை சூலூர் போலீசார் கைது செய்தனர் .இந்த நிலையில் கருமத்தம்பட்டி டிஎஸ் திரு. பி சூர்யமூர்த்தி ஒரு அறிவிப்பு விடுத்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவதுகோவை புறநகர் மாவட்டங்களில் வீடு வாடகைக்கு கேட்பவர்களிடம் ஆதார் அட்டை வாக்காளர் அட்டை உள்ளதா? என்பதை கேட்டு இருந்தால் மட்டுமே வீடுகளை வாடகைக்கு கொடுக்க வேண்டும் வாடகைக்கு குடியிருப்போர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் தங்க கட்டிகள் மற்றும் பாலிஷ் போட்டுதருவதாக ஏமாற்றும் கும்பலைப் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ளபோலீசுக்கு தெரிவிக்க வேண்டும் மேலும் வீடுகளில் குடியிருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்