விழுப்புரம் : விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பணியிடம் சுமார் ஓரு மாதமாக காலியாக இருந்தது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்த ஜியாவுல்ஹக் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று விழுப்புரத்தில் உள்ள போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்