திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காசம்பட்டியில் கடந்த மாதம் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நாடகம் நடைபெற்றது அப்போது நாடகம் பார்த்துக்கொண்டிருந்த காசம்பட்டியை சேர்ந்த சின்னராஜ் என்பவர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது அவரது இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து சின்னராஜ் நத்தம் காவல் துறையில் புகார் அளித்தார். புகார் குறித்து நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்ததில் திருட்டில் ஈடுபட்ட ரெட்டியபட்டியை சேர்ந்த பொன்னன் மகன் பாவம் என்ற பாபுஜி மற்றும் லிங்கவாடியை சேர்ந்த இராசு மகன் மாணிக்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி வேடசந்தூர் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.