சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில், இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா ஆணையர் திரு .உதய் பாஸ்கர், உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது துபாய் செல்ல வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த நஜிருதீன்(30), ராஜா முகமது (32), ஜாகீர் உசேன் (32), கொழும்பு செல்ல வந்த விஷ்ணு சாகர் (28), தாய்லாந்து செல்ல வந்த சென்னையை சேர்ந்த அப்சர் அலி (27), ஆகியோரை காவல் துறையினர், தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த காவல் துறையினர், அவரகளது உடைமைகளை சோதனை செய்த போது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு கரன்சிகளை, கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், செருப்பில் இருந்தும் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள், சவூதி ரியால்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். 5 பேரிடம் இருந்து ரூ. 50 லட்சத்தி 71 ஆயிரம் மதிப்புள்ள, வெளிநாட்டு கரன்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடர்பாக 5 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.