சென்னை : சென்னை, திருவொற்றியூர் ராஜாக்கடை மல்லிகா புரம் பகுதியை சேர்ந்தவர் முத்து ஆட்டோ டிரைவர். இவரது மகள் பவதாரனி (18), இவர் இன்று திருவொற்றியூரில், உள்ள துணிக்கடையில், வேலை செய்யும் தனது அக்காவிற்கு மதிய உணவு கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளில், வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருவொற்றியூர், காவல்நிலையம் அருகே மெட்ரோ ரயில் தண்டவாளத்தில், 119-எண் கொண்ட தூண் அருகே மேற்கூரையில், இருந்து சிறிய அளவிலான துண்டு பெயர்ந்து, பவதாரனி தலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை, நடத்தி வருகின்றனர்.