சென்னை : சென்னை திண்டிவனம் அடுத்த, முன்னூர் புதிய காலனியை, சேர்ந்த ஜோசப் ஸ்டாரின்(27), இவர் ஐ.டி.ஐ முடித்து விட்டு தச்சு வேலை செய்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை, நான்கு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று காதலியிடமும், நண்பர்களுடனும் பேசி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த கயிற்றால், வீட்டின் மேலே இருந்த சவுக்கு கட்டையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த பிரம்மதேசம் காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு, அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர், தீவிரமாக, விசாரணை நடத்தி வருகின்றனர்.