இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 12.02.2025 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 26 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.
மேலும் இதில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.அருண்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.