சென்னை : சென்னை¸ சென்ட்ரல் மேம்பாலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்களை 10.02.2020ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்ததாக 30க்கும் மேற்பட்ட மாணவர்களை அவர்களது பெற்றோருடன் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டு, உதவி ஆணையர் அவர்கள் தகுந்த அறிவுறை வழங்கியும்¸ மாணவர்களின் பெற்றோர்களிடம் அவர்களது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணித்து வரும்படியும்¸ மாதம் ஒருமுறையாவது கல்லூரி முதல்வரை சந்தித்து தங்களது பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் என்று கேட்டு தெரிந்து வரும்படியும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை