திண்டுக்கல் : நிலக்கோட்டை அருகே உள்ள கல்லடிபட்டியை சேர்ந்த செவ்வினா (21), நர்சு, நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் செய்தார். அந்த புகாரில், என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், சிவ பாலனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவபாலன் என்னுடைய ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டு விடுவதாக, மிரட்டுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் திருமதி. லதா, வழக்குப்பதிவு செய்து, சிவபாலனை கைது செய்தார். பின்னர் அவர், நிலக்கோட்டை மாஜிஸ்திரேடு, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
