சென்னை: கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக தடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு யோசனைகளையும், அறிவுரைகளையும் கூறியுள்ளார்.தமிழகத்தில் நோய் பரவலை தடுப்பதற்கு அரசு போர்க்கால அடிப்படையிலே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சென்னையை பொறுத்தவரைக்கும் இது ஒரு பெரிய நகரம். இது மக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதி. பலபேர் வந்து செல்லக்கூடிய பகுதியாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், குறுகலான தெரு, அந்த குறுகலான தெருவில் அதிகமான மக்கள் வசிக்கின்ற ஒரு பகுதியாக இருக்கின்ற காரணத்தினாலே, இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் எளிமையாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. அதுவே சென்னையிலே நோய் தொற்று அதிகரிப்பதற்கு காரணம் ஆகும்.
கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம்.
இரும்பும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூ வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மலத்திலிருந்து இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள்.
டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக போலீஸ் பிளஸ் நியூஸ் மீடியா சார்பாக, சென்னை மாநகராட்சி வளசரவாக்கம், வடபழனி ஆகிய பகுதிகளில் மற்றும் ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகரில் கொரோனா தடுப்பு மருந்து அனைத்து தெருக்களிலும் தெளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு கிருமி நாசினி, முககவசமும் வழங்கப்பட்டது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் பசித்தோருக்கு உணவு வழங்கும் உன்னத பணியினை இரவு பகலாக செய்து வருகின்றனர்.