திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உட்கோட்டம் தலையாமங்கலம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த – வடபாதி, கம்பர்தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் சதாசிவம் 65.என்பவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவ்வழக்கில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, திருவாரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணைக்கு பின் இன்று 27.01.2025 மேற்படி போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 103 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.19,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் வழக்கு தொடர்பான நீதிமன்ற அலுவல் பணியை சிறப்பாக செய்த காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.