இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த நடராஜன் என்ற முதியவர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அச்சமயம் முதியவரிடம் இருந்து பணத்தை பறித்துகொண்டு ஓட முயன்ற தொண்டி பகுதியைச் சேர்ந்த மன்சூர் என்பவரை அருகிலிருந்தவர்கள் பிடித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கேணிக்கரை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.குகனேஸ்வரன் அவர்கள் u/s 379 IPC-ன் படி மன்சூர் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.