கோவை : கோவை அருகே உள்ள பி.என். புதூர், நேதாஜி வீதியை சேர்ந்தவர் செல்வகுமார், இவரது மகள் தாரணி (14), இவரது சொந்த ஊர் தேனி, தாரணி கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில், 8-ம்வகுப்பு படித்து வந்தார். வீட்டில் அடிக்கடி செல்போன் பேசிக் கொண்டிருந்தார். இதை பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த தாரணி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம், மின் விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை செல்வகுமார் ஆர்எஸ் புரம்காவல் துறையில் , புகார் செய்தார். காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த ஜோதி, வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்