கோவை : கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட, கோவில்பாளையம் மேற்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் மயிலாத்தாள் (70), இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாத்தாள் தனது தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில், வந்த மர்மநபர் ஒருவர் மயிலாத்தாவிடம், இப்பகுதியில் விற்பனைக்கு நிலம் உள்ளதா என்று விசாரித்துவிட்டு, சிறிது தூரம் சென்று திரும்பி வந்து மயிலாத்தாள் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை, பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மயிலாத்தாள், சத்தம் போட்டுள்ளார். இதைப்பார்த்த அக்கம்,பக்கத்தினர் ஓடி வருவதற்குள், மர்ம நபர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கோவில்பாளையம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை, தேடி வருகின்றனர்.
