கோவை: கோவை மாவட்டம், D2 செல்வபுரம் காவல் நிலையத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உணவு கிடைக்காமல், சுற்றி திரிந்தவரை காவல் ஆய்வாளர் திரு. சிவகுமார், தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.சின்னதுரை, திரு.சேகர், தலைமை காவலர்கள் திரு.சின்னதுரை, பிரதீப், முத்துகண்ணன்,திருமதி. பூங்கொடி, காவலர் திரு.தங்கதுரை அடங்கிய காவலர் குழு, அவரை சக மனிதராக மாற்றி, உணவு வழங்கப்பட்டு அனாதைகள் ஆசிரமத்தில் விடப்பட்டார். இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறையினரை பாராட்டினர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்