திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் தேடுதல் வேட்டையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 300 ரவுடிகள் மீது தணிக்கை செய்யப்பட்டது.
அதில் 20 ரவுடிகளை கைது செய்தனர். மேலும் பிடியாணை நிலுவையில் இருந்தால் 21 நபர்களையும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட ரவுடிகள் குற்றம் புரிய வைத்த 16 கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட ரவுடிகள் அனைவரும் கொலை கொள்ளை வழிப்பறி ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.
337 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கஞ்சா விற்பனை தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.
தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா வைத்திருந்த அறுபத்தி மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சுமார் 37 கிலோ பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுங்கி இருந்த சரித்திர பதிவேடு உள்ள குற்றவாளி விக்னேஷ் என்பவரை கைது செய்தனர் அவர் தனது எதிரிகளை கொலை செய்யும் நோக்கத்தோடு பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி ஒன்று அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை