திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு 13.01.2020 இன்று ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கங்காதரன் அவர்களும் DEPARTMENT CANDIDATE எழுத்துத்தேர்வு எழுதுவதை கண்காணித்தனர், மேலும் வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு. நாகராஜ் அவர்களும் நேரில் வந்து மேற்பார்வையிட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர் தேர்வு நல்ல முறையில் நடைபெற்றது.