திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி.KS.ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் தண்டராம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.K.பாரதி தானிப்பாடி காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.G.முத்துக்குமாரசாமி திரு.I.நசீருதீன் மற்றும் காவலர்கள் இணைந்து தானிப்பாடி அருகிலுள்ள சின்னையம்பேட்டை செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது TN25 AK 4619 என்ற பதிவெண் கொண்ட வோல்ஸ்வேகன் காரை நிறுத்த முற்பட்டபோது காரை நிறுத்தாமல் போலீசாரின் மீது மோத வருவதுபோல் வந்து திடீரென யூடர்ன் செய்த போது எதிரில் வந்த மற்றொரு டவேரா காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
மேற்கண்ட வோல்ஸ்வேகன் காரை சோதனை செய்தபோது அதில் தலா 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று லாரி டியூப் மற்றும் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 வாட்டர் கேன்களில் கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது காரை ஓட்டி வந்த 1)கோபிநாத், வயது 36, த/பெ.தேவராஜ் காம்பட்டு கிராமம், தண்டராம்பட்டு தாலுக்கா 2)மாரிமுத்து வயது 32 த/பெ.ரவி, வரகூர் கிராமம், தண்டராம்பட்டு தாலுகா என்பவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.