திருவாரூர்:திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், ஆலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட – 1) பிரதாப் 21/23, 2) அஜீத் 26/23, 3) மகேந்திரன் 48/23,. 4) மகேஷ் 19/23, ஆகியோர் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வழக்கின் விசாரணை திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இன்று (27.01.2025) குற்றவாளிகளுக்கு 1) பிரதாப், 2) மகேஷ் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.10,000/- அபராதமும், 3) அஜீத், 4) மகேந்திரன் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.5000/- அபராதமும் விதித்து திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் தீர்ப்பு வழங்கினார்கள்.
திருட்டு, வழிப்பறி, பகல் கொள்ளை, கூட்டுக்கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள். மேலும் இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள்.