திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான நாயக்கனூர் என்ற பகுதியில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல். விற்பனை செய்த இளங்கோ (40), என்பவரை ஐ.ஜி. தனிப்பிரிவினர் கைது செய்து எரியோடு காவல் நிலையத்தில், ஒப்படைத்தனர்.
ஓட்டுநர், காவல் நிலையத்தில் சரண்!
நாகையாகோட்டை அருகே சைக்கிளில் சென்ற பொன்னுச்சாமி (72), என்பவர் மீது மண் ஏற்றி வந்த லாரி மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலி, விபத்துக்கு காரணம் திண்டுக்கல்லில், இருந்து எரியோடு கோவிலூர் குஜிலியம்பாறை வழியாக சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முறையான பாதுகாப்பு இல்லாமல் பணி நடைபெற்று வருவதால், விபத்து என உறவினர்கள் குற்றச்சாட்டு விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியுடன் குஜிலம்பாறை காவல் நிலையத்தில் சரண்.
குட்கா பொருட்கள் விற்பனை, அபராதம் விதித்து சீல்!
திண்டுக்கல் தாலுகா காவல் சரகம் பழனி பைபாஸ் ராமையன்பட்டி கிராமத்தில், டீக்கடை நடத்திவரும் லாசர் (56), என்பவரது கடையை சோதனை மேற்கொண்ட போது அரசால் தடைசெய்யப்பட்ட 506 கிராம் அளவுள்ள குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து கடந்த (15.06.2022)-ம் தேதி திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில், வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் அவரது கடைக்கு சீல் வைக்குமாறு உணவு பாதுகாப்பு துறைக்கு கோரிக்கை வைத்ததின் பேரில், நேற்று (22.06.2022), மேற்படி லாசரின் கடைக்கு ரூ. 5000 அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது.
4 கிலோ கஞ்சா, பறிமுதல்!
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் சரகத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி எரியோடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பொன்குணசேகரன், மற்றும் தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு. அழகுபாண்டி, ஆகியோர்கள் தலைமையிலான தனிப்படையினர் எரியோடு காவல் சரகம் நாயக்கனூரைச் சேர்ந்த இளங்கோவன் (40), என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு எரியோடு காவல் நிலையத்தில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
சிறுமியை அறையில், பூட்டி வைத்து கொடுமை!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த கவிதா(40), அதே பகுதியை சேர்ந்த மாணிக்கவள்ளி என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இதற்காக மாதந்தோறும் வட்டி கட்டி வந்த நிலையில் , கடந்த சில மாதங்களாக வட்டி கட்ட முடியவில்லை. இதனால் அடிக்கடி மாணிக்கவள்ளி, கவிதா வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்துள்ளனர். பணம் தர தாமதமானதால், கவிதாவின் மகள் கனிமொழி என்ற சிறுமியை அறையில் அடைத்து வைத்தனர். இதுகுறித்து கவிதா வடமதுரை காவல் நிலையத்தில், புகார் அளித்தார். அதன்பேரில் மாணிக்கவள்ளி, ரவி, உறவினர் உமா ஆகிய 3 பேர் மீதும் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொன்று கொள்ளையடித்த, 2 பேர் கைது!
கொலை செய்யப்பட்ட முத்துச்சாமி தோட்டத்திற்கு அருகில் வேலை பார்த்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மாயமானதால் சந்தேகத்தின் பேரில், அவர்களை தேடிச்சென்றனர். வடமதுரை அருகில் உள்ள புத்தூரை சேர்ந்த இளையராஜா(27), வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த பரமேஸ்வரன்(20), ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்ததில் முத்துச்சாமியை கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர். கொள்ளையடித்த பணத்தில், ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் , ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில், அடைத்தனர்.
