சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். செல்வராஜ் அவர்கள் பொதுமக்கள் மனுக்களை மக்கள் குறைதீர்க்கும் முகாம் மூலமாக கனிவுடன் மக்களின் மனுக்களின் மீதான தீர்வுகளை சிவகங்கை மாவட்டம் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் ,சார்பு ஆய்வாளர்கள்,சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகிய அனைவருக்கும் பொதுமக்களின் மனுக்களை விரைந்து தீர்வு காணும் படி உத்தரவிட்டத்தின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட காவல்துறையின் மூலம் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. மற்றும் நமது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பதவியேற்று ஒரு சில மாதங்களிலே குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கும் வகையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது கைது செய்துள்ளார். அது மட்டுமில்லாமல் வாரந்தோறும் புதன் கிழமை பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை கனிவுடன் பெற்று உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு உட்கோட்டம் சார்பாக தனிப்படை அமைத்து மனுக்கள் மீதான குறைகளை விரைந்து முடித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு எஸ் செல்வராஜ் அவர்கள் மக்களுக்காக தொடர்ந்து சேவையில் பொதுமக்களின் அன்பையும் பாராட்டையும் பெற்றார். உயர்திரு எஸ் செல்வராஜ் அவர்களின் பொதுமக்களுக்கான சேவை தொடர போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி