சென்னை: சென்னை போக்குவரத்து காவல் துறையில் புதிதாக சுமார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பயன்படுத்தப்படும். இந்த வாகனம் பேட்டரி மூலம் இயங்கக்கூடியது, இதில் 48 வோல்ட் 12ஆம்ஸ் பொருத்தப்பட்டு Self Balancing Automatic Dynamic Stability. இந்த வாகனத்தின் எடை 58 கிலோ . இந்த வாகனம் 6 முதல் 7 மணிநேரம் வரை இயங்கக்கூடியது, இந்த வாகனத்தில் Digital Speedometer மற்றும் Wireless Remote Control உள்ளது. இந்த வாகனம் 360 டிகிரி சுழலக்கூடியது.
மேலும் இந்த வாகனத்தில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த சைரன் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் செல்ல முகப்புவிளக்கும் பின்புறம் சிவப்புவிளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் நான்கு சக்கரவாகனம் செல்லமுடியாத இடத்தில் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தலாம்.
பொதுமக்கள் அதிகமாககூடும் இடத்தில், நடைபாதையில் சென்று போக்குவரத்தையும், மக்களையும் ஒழுங்கு படுத்த மிகவும் உதவியாக இருக்கும். தற்போது, இந்த சுமார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் ஒத்திகைக்காக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த வாகனம் ஆதரவாளர்களின் சார்பாக (Sponsorship) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று 10 வாகனம் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப, அவர்கள் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் திரு.அருண், இணை ஆணையர்கள் திரு.எழிழரசன், திரு.ஜெய் கவுரி, திரு.சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பெண்கள் போக்குவரத்து பிரிவு (Women Traffic Squad)
சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படியும் திரு. A.அருண் இ.கா.ப, கூடுதல் காவல் ஆணையாளர் போக்குவரத்து பிரிவு அவர்களின் வழிகாட்டுதலின் படியும் சென்னை மாநகரம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறார்களின் போக்குவரத்து சம்மந்தமான குறைகள், வாகனதணிக்கை, ஆர்பாட்டங்கள் போன்ற சமயங்களில் பெண்காவல் அதிகாரிகளை அணுகும் பொருட்டு பெண்கள் காவல் போக்குவரத்து பிரிவு ஏற்படுத்தப்படுகிறது.
இந்த படையில் ஒரு பெண் உதவி ஆய்வாளர், ஒரு பெண் ஏட்டு மற்றும் 2 பெண் காவலர்கள் இடம் பெறுவார்கள்.சென்னையில் 4 போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர்கள் உள்ளனர். ஒவ்வொரு போக்குவரத்து காவல் துணை ஆணையர் சரகத்திலும் தலா 4 பெண் சிறப்பு காவல் படைகள் செயல்படும்.
இவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கலந்தாய்வு கூட்டம் நடுத்துவார்கள். இக்குழுவானது முழுவதும் பெண் காவலர்களை கொண்டு இயக்கப்படுவதால், பெண்கள் மற்றும் சிறார்கள் இக்குழுவினை எளிமையாகவும் எந்தவித தயக்கமும் இன்றி இக்குழுவை அணுகமுடியும் மேலும் பெண்கள் கல்லூரிகள், பள்ளிகள் பொழுதுபோக்கு இடங்களில் போக்குவரத்தை சீர்செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். இக்குழுவானது பெண்கள், சிறார்கள் மற்றும் காவலர்கள் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.
இக்குழு ஒவ்வொரு போக்குவரத்து மாவட்டத்திலும் ஒரு பெண் உதவி ஆய்வாளர், பெண்தலைமை காவலர் மற்றும் இரண்டு காவலர்களை கொண்டு இயங்கும். இவர்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் காவல் துணை ஆணையாளர் உத்தரவின்படி தேவைப்படும் இடங்களில் பணிபுரிவார்கள். இக்குழு முக்கியமாக பெண்களின் வாகனத்தை தணிக்கை செய்யும் பொழுது
உதவிபுரிவார்கள்.
பெண்களின் ஆர்பாட்டக்காலங்களில் எந்தவித இடையூறும் இல்லாமல் போக்குவரத்து சீர் செய்வார்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி அருகில் போக்குவரத்தை சரி செய்வார்கள். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்
போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவார்கள். பெண்கள் மற்றும் சிறார்கள் அதிகமாக கூடும் இடங்களான சந்தை மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் போக்குவரத்தை சரி செய்வார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை