சென்னை : சென்னை போரூரில், விக்னேஸ்வரா நகரில் உள்ள பிரபு (39), ஸ்ரீபெரும்புதூரில், உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த பிரபுவை, நிறுவனம் வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இதனால் சில வருடங்களாக வேலைக்கு, செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த பிரபு, குடிப்பழக்கத்துக்கு ஆளானார்.
நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு ,இரவில் வீட்டுக்கு திரும்பி வந்த ஜனனி, வீட்டில் தனது கணவர் பிரபு தூக்குப்போட்டு, தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போரூர் காவலர், தூக்கில் தொங்கிய பிரபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி காவலர், வழக்குப்பதிவு செய்து பிரபுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த ஒரு வருடமாக வேலைக்கு, செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த பிரபு, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.35 லட்சத்தை இழந்திருப்பது தெரிந்தது. அதில் ரூ.15 லட்சத்தை கிரெடிட் கார்டு மூலமாக, வங்கியில் கடன் பெற்று உள்ளார். மீதி ரூ.20 லட்சம் வீட்டு கடனை அடைக்க அவரது தந்தை கொடுத்த பணமாகும். இதனால் மனஅழுத்ததின் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார். இது முதற்க்கட்ட விசாரனையாக தெரியவந்துள்ளது. வேறு காரணம் உள்ளதா என காவலர் விசாரித்து வருகின்றனர்.