அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த மாதத்தில் சர்க்கஸ் நடத்த ஒரு சர்க்கஸ் நிறுவனம் கூடாரத்தை ஏற்படுத்தினர். இந்த சர்க்கஸ் கம்பெனியில் 70க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உடனடியாக அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். 18/04/2020 அன்று சர்க்கஸ் நிறுவனத்திற்கு முகக் கவசங்கள், காய்கறி மற்றும் மளிகை பொருட்களை ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் திருமதி.தமிழரசி அவர்கள் வழங்கினார்.