கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப. தலைமையில், இன்று காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட சிறாா்கள் பயன்படுத்துவதை தடுத்தல், விழிப்புணா்வு ஏற்படுத்துதல், விற்பனை செய்வோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தல், சிறாா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தால் அவா்களை போதைப் பழக்கத்திலிருந்து மீட்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், குழந்தைகள் இதுபோன்ற பழக்கங்களுக்கு ஆளாவதை இன்னும் எந்தெந்த வகையில் தடுக்கலாம்இ இது தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை எந்த வகையில் ஊக்கப்படுத்தலாம் என்பன உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் திரு. ஏ.பாலகிருஷ்ணன் இ.கா.ப., கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., சுங்க இலாகா அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட வன சரக அதிகாரி, மாவட்ட சமூக நல அலுவலர், பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள், மாவட்ட போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்