நெல்லை : கொரோனா நோய்த்தொற்று பரவலாக நாடுமுழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டை மீறி சிலர் வெளியே சென்று வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நெல்லை மாநகர பேட்டை காவல் துறையினர் அப்பகுதி முழுவதும் சுற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அப்போது இந்த நோயின் பாதிப்புகள் குறித்தும், ஊரடங்குச் சட்டம் குறித்தும் கொரோனா நோயால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வேறு யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். இந்த விழிப்புணர்வு அணிவகுப்பு மாநகர உதவி காவல் ஆணையாளர் திரு. சதீஷ் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.