குற்றப்பிரிவு (Crime)

குற்றபிரிவு, கூடுதல் காவல்துறை ,யக்குனர் தலைமையில் பின்வரும் பிரிவுகளைக் கொண்டு இயங்குகிறது.

1)சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (Special Investigation Wing) :
மத அடிப்படைவாதிகள் தொடர்பான வழக்குகளில் தீவிர புலன் விசாரணை செய்வதற்கும், வழக்குகளை நடத்துவதற்கும் எனத் தனியாகச் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு உருவாக்கப்பட்டு காவல்துறைத் தலைவர் ஒருவரின் தலைமையில் இயங்கி வருகிறது. 2007ஆம் ஆண்டில் 230 அடிப்படைவாதிகள் தொடர்பான ஐந்து வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன. இதுவரையில், இப்பிரிவின்  மூலம் 27 வழக்குகளில் 348 அடிப்படைவாதக் குற்ற எதிரிகளுக்குத் தண்டனைகள் பெற்றுத் தரப்பட்டுள்ளன. 107 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

2)போதைப் பொருள் கடத்தல் நுண்ணறிவுப் பிரிவு (Narcotics Intelligence Bureau -NIB) :
தமிழகத்தில் 15 அலகுகள் கொண்டு இயங்கி வரும் இப்பிரிவு காவல்துறைத் துணைத் தலைவர், ஒருவரின் கீழ் செயல்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் பற்றிய நுண்ணறிவுத் தகவல்களை சேகரிக்கும் இப்பிரிவு போதை மற்றும் மனமயக்கப் பொருட்கள் தடுப்புச் சட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறது. 2007ம் ஆண்டில் 1472 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 1496 எதிரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் போதைப் பொருள் கடத்திய 21 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர். ரூ.27.36 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

3)வீடியோ திருட்டுத் தடுப்புப் பிரிவு (Video Piracy ):
காவல் கண்காணிப்பாளர் ஒருவரின் தலைமையில் இயங்கி வரும் இப்பிரிவில் மாநிலம் முழுவதிலும் 12 அலகுகள் உள்ளன. பதிப்பு காப்புரிமைச் சட்டம் தமிழ்நாடு காணொளிப் பேழை பதிவுக் கருவிகள் மற்றும் கம்பி வடத் தொலைக்காட்சி இணைப்பு கட்டுப்பாட்டு சட்டம் 1984 ஆகியவற்றின் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து தண்டனைப் பெற்றுத் தரும் பணிகள் ,ப்பிரிவில் மேற்கொள்ளப்படுகின்றன. 2007ம் ஆண்டில் 1844 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 1866 எதிரிகள் கைது செய்யப்பட்டனர். ரூ.17.39 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

4)கூட்டுக் கொள்ளைத் தடுப்புப் பிரிவு (Anti Dacoity) :
காவல் கண்காணிப்பாளர் அளவிலான அதிகாரியின் கீழ் இயங்கி வரும் இப்பிரிவு மாநிலத்திலும், மாநிலங்களுக்கிடையேயும் செயல்படும் குற்றவாளிகளையும் அவர்களது நடவடிக்கைகளையும் பற்றிய தகவல்களைச் சேகரித்து வருகிறது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.