தென்காசி : தென்காசி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றாலம் சாரல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி பகுதியில் வண்ண மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, அருவி நீர்வீழ்ச்சி பகுதியில் கலர் கலர் மின் விளக்குகளால் ஜொலிக்கவிட்ட காட்சி சுற்றுலா பயணிகளின் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்நிலையில் (07/08/2022), தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக காவல்துறையினரின் வாத்திய இசைக்குழு கலந்துகொண்டு அரங்கத்தை தன் இசையால் மெய்சிலிர்க்க வைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சி நிறைவாக வாத்திய இசை குழுவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.