திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் விற்பனைக்காக காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறயினர் பறிமுதல் செய்தனர். இக்கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு
அய்யாபட்டி ரோட்டிலுள்ள தேங்காய் கோடவுனில் திடீர் சோதனை நடத்தினர். அங்கிருந்த காரில், அரசால் தடைசெய்யப்பட்ட 500 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. குட்கா கடத்தி வந்த ஊராளிபட்டியை சேர்ந்த சுதாகர், (35), நத்தத்தை சேர்ந்த முகமது ஈசாக், (34), ஜஹாங்கீர், (37), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குட்கா மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.
தப்பிய கார் டிரைவர் ராகுல், நாகராஜை தேடி வருகின்றனர். இந்த குட்கா எங்கிருந்து வாங்கி வரப்பட்டு, எங்கு கடத்தப்படயிருந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா