கரூர் : கரூர் மாவட்டம், வாங்கல் நெரூர் வடக்கு பாளையூர், பகுதியை சேர்ந்த ராமதாஸ், என்பவரது மகன் திலீப்,(24), இவர் மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்த, (17), வயதுடைய, பிளஸ் 2 படித்து வரும், மாணவிக்கு கடந்த, 14ம் தேதி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தந்தை காவல் துறையினரிடம், புகார் செய்தார். இதையடுத்து, வாங்கல் காவல் துறையினர், திலீப்பை போக்சோ சட்டத்தில், கைது செய்தனர்.