சென்னை : சென்னை, அடையாறு பகுதியைச சேர்ந்த பட்டதாரி பெண், ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வீட்டில் தனியாக, வசித்து வருகிறார். இதை தெரிந்து கொண்ட மர்ம வாலிபர் ஒருவர், கடந்த 20-ம் தேதி அன்று பணிமுடிந்து வீட்டுக்கு வரும் போது, பின் தொடர்ந்து வந்துள்ளார். அதை கவனிக்காத அந்த பெண், வீட்டிற்குள் சென்று கதவை பூட்டாமல், இருந்துள்ளார். பின்னர் அந்த வாலிபர் திறந்து கிடந்த, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி, வாயில் துணியை வைத்து,கைகளையும் கட்டி உள்ளார். பின்னர் அந்த வாலிபர் அந்த பெண்ணை பாலியல், வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் அவர் செல்போனிலும் படம் பிடித்துள்ளார். அதன் பிறகு அவர் செல்போன், காட்சியை அவரிடம் காட்டி, நடந்ததை வெளியில் சொன்னால், ஆபாச காட்சியை இணையதளத்தில் ,வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். ஆனால் அந்த பெண் துணிச்சலாக, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தார். இதுகுறித்து காவல் துறையினர் , வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது, திருவல்லிக்கேணியை சேர்ந்த விஷால் (23), என்பது காவல் துறையினருக்கு ,தெரியவந்தது. தற்போது அவரைகாவல் துறையினர், கைது செய்து விசாரணை, நடத்தி வருகின்றனர்.