நாகப்பட்டினம் : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குத்தாலம் போலீசார் சரக த்திற்கு உட்பட்ட திருவாலங்காடு,திருவாவடுதுறை, குத்தாலம் தேரழுந்தூர் ஆகிய கிராமங்களில் தடையை மீறி டீ கடைகள் திறக்கப்பட்டு அங்கு பொது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு விதிகளை மீறி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்த 14 டீ கடை உரிமையாளர்களை கைது செய்தனர். மேலும் இவர்களின் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.