நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை வியாழக்கிழமை 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 118 இருசக்கர வாகனங்கள் ஒரு நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட காவல் துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் நோய் தொற்று இதுவரை 12 நபர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் காரணமா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு சுகாதார துறை வழிகாட்டுதல் படி பல்வேறு கட்டுபாடுகள் விதித்து 90க்கும் மேற்பட்ட இடங்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறிய 2,463 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்களிடம் இருந்து 1,628 இருசக்கர வாகனங்கள் மற்றும் 41 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தேவையின்றி வெளியில் அடிக்கடி வர வேண்டாம் என்றும் மீறி வந்தால் கடும் சட்ட நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.