சென்னை: அம்பத்தூர் காவல் ஆய்வாளர் திரு.சிதம்பர முருகேசன் அவர்கள் அம்பத்தூர் ழுவு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த, வாகனங்களை ஒழுங்கு படுத்தியும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் பாதுகாப்பு மற்றும் விழிப்பணர்வு பற்றி எடுத்துரைத்தார்.
சென்னை பெருநகர காவல் துறை சார்பில் (காவலன் ஆப்) என புதிய செயலியை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாக ஜெய் ஸ்ரீ கிருஷ்ணர் சில்க்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரு.PR. சிதம்பரமுருகேசன், திரு. சி. விஜயகுமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அங்கு இருந்த ஊழியர்களிடம், காவலன் செயலியை அறிமுகம் செய்து, அனைவரின் செல்போனிலும், பதிவிறக்கம் செய்ய வைத்து, அவற்றின் செயல்பாடு குறித்து விளக்கி கூறினார்.
ஏதாவது பிரச்சினை இருந்தால், தொடர்புக்கு கொள்ள, தனது அலைபேசி எண்ணை (திரு.PR. சிதம்பரமுருகேசன்-9498186839) தெரிவித்தார். திரு. சிதம்பரம் முருகேசன் காசிமேடு காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளராக இருந்து அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்ட போது காசிமேடு மக்கள் இவருக்காக சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
நமது குடியுரிமை நிருபர்
S. வீரமணி
குடியுரிமை நிருபர்